ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் எந்திரம் பழுது

பழனியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் எந்திரம் பழுதானதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

Update: 2023-04-21 19:00 GMT

பழனியில், கொடைக்கானல் சாலை சந்திப்பு பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் குளிரூட்டி திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் சுமார் 3,500 லிட்டர் பால் குளிரூட்டி அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்குள்ள குளிரூட்டும் நிலையத்தில் எந்திரம் பழுதானது. இதனால் பால் குளிரூட்டும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் இங்கு வரக்கூடிய பால் பிற குளிரூட்டும் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பால் வினியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டு்ளளது.

இதுகுறித்து குளிரூட்டும் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், பழனி பால் குளிரூட்டும் நிலையத்தில் எந்திரம் பழுதால் இங்கு வரும் பால் தேவத்தூர், பூலாம்பட்டி, கூட்டக்காரன்புதூர் பகுதியில் உள்ள குளிரூட்டும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விரைவில் பழுதான எந்திரம் சரிசெய்யப்பட்டு மீண்டும் நிலையம் செயல்பட உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்