ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா; மீனவர்கள் 10 நாட்கள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள்
ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மீனவர்கள் 10 நாட்கள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெகதாப்பட்டினம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்தநிலையில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதனால் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் திருவிழா முடியும் வரை 10 நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். இதனால் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.