இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க வாடகை வாகனத்தில் செல்ல அனுமதி கிடையாது என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க வாடகை வாகனத்தில் செல்ல அனுமதி கிடையாது என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நினைவு தினம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பவர்கள் தங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கண்டிப்பாக அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்பவர்கள் தங்களின் சொந்த வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும். வாடகை வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்லக்கூடாது. கார், வேன் போன்ற வாகனங்களில் மேலே அமர்ந்து செல்ல அனுமதி இல்லை.
வாகனங்களில் ஒலிப்பெருக்கி வைக்கவோ, கொடிகட்டி செல்லவோ, பிற சாதி, மதத்தினர் புண்படும்படியாக கோஷங்கள் எழுப்பவோ கூடாது. ராமநாதபுரம் மாவட்ட போலீசார் அனுமதித்துள்ள வழிதடத்திலேயே சென்று வர வேண்டும்.
அனுமதிச்சீட்டு
வாகனத்தில் அனுமதிச்சீட்டு ஒட்டி, வாகனத்தின் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் வாகனம் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது என்ற சீட்டு ஒட்டிய பின்னரே வாகனம் செல்ல அனுமதிக்கப்படும்.
வாகனத்தில் ஆயுதங்களோ, ஜோதியோ கொண்டு செல்ல அனுமதி இல்லை. பேண்ட் வாத்தியங்கள் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.