ரெயில்வே பாலம் புதுப்பிக்கும் பணி

நெல்லையில் ரெயில்வே பாலம் புதுப்பிக்கும் பணி 6 மணி நேரத்தில் முடிவடைந்தது.

Update: 2022-06-18 19:30 GMT

நெல்லை:

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், தாழையூத்து ரெயில் நிலையத்துக்கும் இடையில் அழகனேரி ரெயில்வே கேட் அருகில் நெல்லை கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள ரெயில்வே பாலத்தில் தண்டவாளத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு தேவையான 'கான்கிரீட் காரிடார்' எனப்படும் கிடைமட்ட தூண்கள் தயார் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ரெயில்வே பாலத்தில் புதுப்பிக்கும் பணி நேற்று காலை 9.45 மணி அளவில் தொடங்கியது. கால்வாயின் மீது அமைக்கப்பட்டிருந்த தண்டவாளம் அகற்றப்பட்டது. தொடர்ந்து அதை தாங்கிக் கொண்டிருந்த 35 ஆண்டு கால பழமையான இரும்பு பாலத்தை வெட்டி, ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து கான்கிரீட் காரிடார்கள் தூக்கி வைக்கப்பட்டு, அதன் மீது தண்டவாளம் பொருத்தப்பட்டது. 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பணிகள் மாலை 3.45 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி அந்த பகுதியில் ஒரு வழித்தடத்தில் மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் திருச்செந்தூர் -பாலக்காடு ரெயில், திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை தாமதமாக சென்றன. மாலையில் இரட்டை பாதைகளிலும் ரெயில்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்