செஞ்சிக்கோட்டை மதில் சுவர் பழமை மாறாமல் சீரமைப்பு

செஞ்சிக்கோட்டை மதில் சுவர் பழமை மாறாமல் சீரமைப்பு

Update: 2023-02-16 18:45 GMT

செஞ்சி:

1510-ம் ஆண்டில் கோனார் வம்சத்தினர் மற்றும் விஜயநகர மன்னர்களால் செஞ்சிக்கோட்டை கட்டப்பட்டது. ராஜகிரி, கிருஷ்ணகிரி, சதுரகிரி ஆகிய 3 கோட்டைகளுடன் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த 3 கோட்டைகளையும் இணைக்கும் வகையில் பெரிய, பெரிய கற்களால் மதில் சுவர்கள் உள்ளன. சுவர்கள் பலவீனமடைந்து சரிந்துள்ளதால் அதனை சீரமைக்க தொல்லியல்துறையினர் முடிவு செய்தனர். முதற்கட்டமாக செஞ்சி ராஜகிரி கோட்டையின் வெளிப்புறம் இருந்த மதில் சுவர்கள், பழமை மாறாமல் பழைய முறைப்படியே செங்கல் சுண்ணாம்பு கலந்த கலவை மூலம் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் அனுபவம் வாய்ந்த கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சிதிலமடைந்த நிலையில் உள்ள அனைத்து இடங்களும் பழமை மாறாமல் பழைய நிலையிலேயே புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளதால் பேருராட்சி சார்பில் செஞ்சிக்கோட்டைக்கு சாலை வசதியும் செய்யப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்