ஆன்லைன் மூலம் மட்டுேம தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் எஸ்.ஜெ.சரவணன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் எஸ்.ஜெ.சரவணன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஆன்லைன் மூலம் மட்டும்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளுக்கும் 2023-ம் ஆண்டிற்கான தொழிற்சாலை உரிமத்தினை இணையவழி (ஆன்லைன்) மூலம் புதுப்பிக்க வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பதிவு பெற்ற தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்கள் தொழிற்சாலை சட்ட உரிமம் புதுப்பிக்கப்பட்டு அதை இணையவழி முறையிலேயே வழங்கப்படும். இதற்காக அலுவலகம் வர வேண்டிய அவசியம் இல்லை.
நகல் அனுப்ப வேண்டும்
உரிம திருத்தம், உரிம மாற்றம் ஆகியவற்றிற்கும் இணையவழி முறையில் விண்ணப்பித்து இணையவழியில் உரிம கட்டணத்தை செலுத்தி, அதன் 3 நகல்கள் (படிவம் 2) மற்றும் online payment செலுத்தப்பட்டதற்கான நகல் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.