அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும்

நாகூர் அருகே கோவில் தேரோட்டத்தின்போது அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-16 18:45 GMT

நாகூர்:

நாகூர் அருகே கோவில் தேரோட்டத்தின்போது அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து மிகுந்த சாலை

நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகிறார்கள். நாகையில் இருந்து சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாகூர் வழியாக அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் சென்று வருகின்றன.

இவ்வாறு போக்குவரத்து மிகுந்த சாலையாக நாகூர் மெயின் சாலை இருந்து வருகிறது. நாகூர் பழைய பஸ் நிலையம் அருகில் சாலைகளில் அதிகமாக வாகனங்கள் சென்று வருகிறது.

பொதுமக்கள் அவதி

வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய சாலை என்பதால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த வேகத்தடை அங்குள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்திற்காக அகற்றப்பட்டது. ஆனால் அதன் பிறகு மீண்டும் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் சாலையை கடந்து செல்வதற்கு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அதே இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்