பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரை ஓரம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-05-31 12:05 GMT

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பாலாற்றங்கரை ஓரம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

நகரமன்ற கூட்டம்

ராணிப்பேட்டை நகரமன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராணிப்பேட்டை பாலாறு அருகே காரிய மேடை, கோவில்கள் ஆகியவை உள்ளது. இதன் அருகிலேயே டாஸ்மாக் மதுபானக் கடையும் உள்ளது. இதனால் பலர் அங்கேயே மது அருந்துகின்றனவ். இவர்களால் கோவிலுக்கு செல்லும் பொதுமக்களும், இறந்தவர்களுக்கு காரியம் செய்ய வரும் பொதுமக்களும், மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

எனவே பாலாறு அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் பதிலளித்தார்.

ராணிப்பேட்டை பிஞ்சி ஜெயராம் நகர், காரை வண்ணாரப்பேட்டை ரோடு ஆகிய இடங்களில் உள்ள பழுதடைந்த, பயன்பாட்டில் இல்லாத, சமுதாய கழிப்பிடங்கள், ராணிப்பேட்டை அம்மூர் ரோடு முத்துக்கடை பஸ் நிலையம் அருகே பழுதடைந்துள்ள பொது கழிப்பிடம், ஆகியவற்றை இடித்து அகற்றி புதிதாக கழிப்பிடங்கள் கட்டுதல், என்பது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்