சிக்னல்களை அகற்றிவிட்டு ரவுண்டானா அமைப்பு

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவையில் சிக்னல்களை அகற்றி விட்டு ரவுண்டானா அமைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2023-01-30 18:45 GMT

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவையில் சிக்னல்களை அகற்றி விட்டு ரவுண்டானா அமைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சிக்னல்கள் அகற்றம்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போக்குவ ரத்து துணை கமிஷனர் மதிவாணன் முன்னிலையில் சாலை பாது காப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி உதவியுடன் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது முக்கிய சாலைகளில் உள்ள போக்குவ ரத்து சிக்னல்களை அகற்றிவிட்டு ரவுண்டானா அமைத்து போக் குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை லாலிரோடு சந்திப்பு, மேட்டுப்பாளையம் ரோடு சிந்தாமணி சந்திப்பு மற்றும் புரூக் பாண்ட் ரோடு கிக்கானி பள்ளி சந்திப்பு, கணபதி மோர் மார்க்கெட் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்த போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டன.

நெரிசல் தவிர்ப்பு

அங்கு வாகனங்கள் நிற்காமல் செல்வதற்கு ஏற்ற வகையில் ரவுண் டானா அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் சிக்னலுக்காக காத்திருக்காமலும், நிற்காமல் தொடர்ந்து செல்லும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த 4 இடங்களிலும் வாகன நெரிசல் தவிர்க்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதில் புரூக் பாண்ட் ரோடு கிக்கானி பள்ளி சந்திப்பு பகுதியில் தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. அங்கு புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

போக்குவரத்து மாற்றம்

இதே போன்று புரூக் பாண்ட் ரோட்டில் மற்றொரு சிக்னலில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க கோட்டப் பொறியாளா், சாலை பாதுகாப்பு பிரிவை சோ்ந்த அலுவலா்களுடன் ஆலோச னை நடத்தினார். அதைத்தொடர்ந்து புரூக் பாண்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்