மடத்துக்குளம் அருகே கழுகரையில் கொட்டப்பட்டிருந்த பல்வேறு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

மடத்துக்குளம் அருகே கழுகரையில் கொட்டப்பட்டிருந்த பல்வேறு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

Update: 2022-06-23 11:41 GMT

மடத்துக்குளம்

மடத்துக்குளம் அருகே கழுகரையில் கொட்டப்பட்டிருந்த பல்வேறு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

மடத்துக்குளம் தாலுகா கழுகரையிலிருந்து வேடபட்டி செல்லும் ரோடு 2 கிலோ மீட்டர் நீளமுள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவியர் என தினசரி ஆயிரக்கணக்கானோர் பயன்ப டுத்துகின்றனர். மடத்துக்குளம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையும் உடுமலை - தாராபுரம் ரோட்டையும் துங்காவி பகுதியில் இணைக்கும் வழித்தடமாக இது உள்ளது.

இது தவிர தேசிய நெடுஞ்சாலையில் போ க்குவரத்து பாதிக்கும் போது இது மாற்று வழி தடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கழுகரை பகுதியில் ரோட்டின் இருபுறமும் இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.இதனால் துர்நாற்றம் வீசியதோடு, இந்த பகுதியை கடந்து செல்லவே முடியாத நிலையில் இருந்தது. இறைச்சிக்காக வரும் நாய்கள் சண்டையிட்டு ரோட்டின் குறுக்கே பாய்வதால் தொடர்ந்து விபத்துக்களும் நடந்தன. இதனால் இந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தினத்தந்தியிலும் செய்தி வெளியானது.

இந்த நிலையில் மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பகுதியில் குவிந்தும், பரவியும் கிடந்த இறைச்சி மற்றும் கட்டடக் கழிவுகளை ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி அப்புறப்படுத்தினர் இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- இந்தப் பகுதியை பயன்படுத்த முடியாத அளவில் இருந்தது தற்போது சுத்தம் செய்தது. வரவேற்கத்தக்கது. தொடர்ந்து இந்த பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை தேவை" என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்