வாணியம்பாடி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்
வாணியம்பாடி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நீர்நிலைகளை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி- நூருல்லாபேட்டை பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றினர். அப்போது வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.