அனுமதியின்றி வைத்த விளம்பர பலகைகள் அகற்றம்

நெல்லை டவுனில் அனுமதியின்றி வைத்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.

Update: 2023-06-24 19:12 GMT

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் 4 மண்டலங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை (பிளக்ஸ், பேனர்களை) அகற்ற உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் கடந்த சில வாரங்களாக மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி ரத வீதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை அகற்றும்படி உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் அறிவுறுத்தினார். இதையடுத்து அவற்றை அகற்றும் பணி சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் நடந்தது.

நெல்லை டவுனில் 4 ரத வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதி பெறாமலும் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மனோஜ், சேக், முத்துராஜ், மாரியப்பன் ஆகியோர் அகற்றி மாநகராட்சி லாரியில் ஏற்றிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்