போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றம்
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டன.
தாயில்பட்டி,
சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் மெயின் ரோடு மற்றும் சிவகாசியில் இருந்து மண் குண்டாம்பட்டி வழியாக தாயில்பட்டி-சாத்தூர் செல்லும் ரோட்டில் இரு புறங்களிலும், மரக்கிளையினால் வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆதலால் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அகற்றினர். கோரிக்கையை நிறைவேற்றிய நெடுஞ்சாலை துறையினருக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.