மின் கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றம்
உடன்குடி பகுதியில் மின் கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றம்
உடன்குடி:
உடன்குடி நகர பகுதியில் திடீர் திடீரென காற்று வீசும் போது, மின்சார கம்பிகளுக்கு இடையே செல்லும் மரக்கிளைகள் மின்சார கம்பியில் தேய்த்து அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் உடன்குடி பகுதியில் மின்கம்பிளுக்கு இடையூறான மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் மின்சார துறையினர் ஈடுபட்டனர். ஒவ்வொரு டிரான்ஸ்பார்மராக மின்சாரத்தை நிறுத்தி இடையூறான மரக்கிளைகளை அகற்றினர்.