கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

லஞ்சம் கேட்ட வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-12-03 19:14 GMT


விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியோர் உதவித்தொகை கோரி வந்த மூதாட்டியிடம் லஞ்சம் கேட்டதாக குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டி மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இந்த புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்