தூத்துக்குடியில் கழிவுநீர் வடிகாலை மூடி அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் கழிவுநீர் வடிகாலை மூடி அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியான அத்திமரப்பட்டி ரோடு பகுதியில் இருந்த கழிவுநீர் வடிகால் பல இடங்களில் மணல் மூடி அடைப்பு ஏற்பட்டிருந்தது. சில பகுதிகளில் அதன் மீது காங்கிரீட்டால் மூடப்பட்டு பாதைகள் அமைக்கப்பட்டிருந்ததால் தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் ராமச்சந்திரன் ஆலோசனையின் படி, சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அத்திமரப்பட்டி விலக்கு பகுதியில் இருந்து சுந்தர்நகர் வரை உள்ள வடிகாலில் தண்ணீர் எளிதாக செல்லும் என்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.