வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்
சின்னசேலம் அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
சின்னசேலம்:
சின்னசேலம் தாலுகா தோட்டப்பாடி ஏரியில் இருந்து நயினார்பாளையம் நல்லான்பிள்ளைபெற்றால் ஏரிக்கு செல்லும் வாய்க்காலை சில விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலத்திற்கு ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, வாய்க்காலை மீட்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் பிரபு ஆகியோர் நேரில் சென்று வாய்க்காலை அளந்து, பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர்.