அனுமதியின்றி வைக்கப்பட்ட சாமி சிலை அகற்றம்

பார்வதிபுரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சாமி சிலை அகற்றப்பட்டது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-14 19:48 GMT

நாகர்கோவில், 

பார்வதிபுரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சாமி சிலை அகற்றப்பட்டது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமி சிலை

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக கோவில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல பார்வதிபுரத்தில் உள்ள ஒரு சங்க அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. அந்த சங்க அலுவலகத்துக்குள் முருகன் சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

சிலை அகற்றம்

இந்த நிலையில் அந்த சிலையை வழிபட அனுமதிக்கக்கோரி சிலை வைத்தவர்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் நிலம் தொடர்பாக ஏற்கனவே வழக்கு நடப்பதால் சிலை வைப்பதற்கு அங்கு அனுமதி இல்லை என்று கூறி முருகன் சிலையை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று பார்வதிபுரத்தில் உள்ள சங்க அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர், அலுவலகத்துக்குள் வைக்கப்பட்டு இருந்த 'சீல்' அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

போலீசார் குவிப்பு

பின்னர், அந்த முருகன் சிலையை அறநிலையத்துறை அதிகாரிகள் நாகராஜா கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். முன்னதாக சிலை அகற்றுவதையொட்டி அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க சங்க அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்