சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வெறையூரில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2023-01-20 13:17 GMT

வாணாபுரம்

வெறையூரில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

நெடுஞ்சாலை விரிவாக்க பணி

திருவண்ணாமலை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

அதன்படி வெறையூர் பஸ் நிறுத்தம் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுமக்கள் குடியிருப்பு இருந்து வந்ததால் அதனை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாலை ஓரங்களில் இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி கால அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று அதிகாரிகள் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் வீட்டு உரிமையாளர்கள் முன் பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் வீடுகளை அகற்றிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்படும் என்று கூறினர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்ததையடுத்து கடந்த 2 நாட்களாக சாலை ஓரத்தில்ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்