தூத்துக்குடியில் தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடியில் தனியார் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர்அதிரடியாக அகற்றினர்.

Update: 2023-04-19 18:45 GMT

தூத்துக்குடியில் 4 வீடுகள் உள்பட 47 தனியார் ஆக்கிரமிப்புகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

ஆக்கிரமிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. பெரும்பாலான சாலைகளில் உள்ள சிறிய ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி பிரையண்ட்நகர் மெயின் ரோடு, வள்ளிநாயகபுரம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

அகற்றம்

அதன்படி உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில், உதவி பொறியாளர்கள் காந்திமதி, நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். அப்போது சுமார் 3 மீட்டர் தூரம் வரை ரோட்டில் ஆக்கிரமித்து நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன. உடனடியாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 4 வீடுகள், 43 கடைகளை அதிகாரிகள் அகற்றினர். மேலும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்