விபத்துகளை தடுக்க சுவரொட்டிகள் அகற்றம்

நெல்லையில் சூறைக்காற்று- விபத்துகளை தடுக்க சுவரொட்டிகள் அகற்றம்

Update: 2022-07-05 20:32 GMT

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டும் பருவக்காற்று தீவிரமாக வீசி வருகிறது. இதனால் நெல்லையில் சாலைகளில் புழுதி வாரி தூற்றுகிறது. மேலும் சாலையோர சுவர்கள் மற்றும் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் காற்றின் வேகத்துக்கு அப்படியே பெயர்ந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுகிறது. இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதை தடுக்கும் வகையில் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். இதையொட்டி தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் லெனின் மேற்பார்வையில், சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நேற்று சுவரொட்டிகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்