கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் ஊழியர், அரசுவேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-11-07 18:45 GMT

கோவை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் ஊழியர், அரசுவேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெண் ஊழியர்

கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிபவர் சுபஹான் நிஷா (வயது35). இவர் பத்திரப்பதிவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

இதன்பேரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

பணியிடை நீக்கம்

இந்த விசாரணைக்கு பின்னர் கலெக்டர் சமீரன், பெண் ஊழியர் சுபஹான் நிஷாவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் காவல்துறையின் குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்