வயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பம் அகற்றம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சீர்காழி அருகே வயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பம் அகற்றப்பட்டது.

Update: 2022-08-20 18:24 GMT

சீர்காழி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சீர்காழி அருகே வயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பம் அகற்றப்பட்டது.

வயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருமங்கலம் கிராமம் ஏரிக்கரை பகுதியில் ஏராளமான வயல்கள் உள்ளன. இந்த வயல்களில் மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. வயல்களின் நடுவே மின்கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் பெருமங்கலம் ஏரிக்கரையில் உள்ள வயலில் மின்கம்பம் சாய்ந்து கிடந்தது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்து வந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அகற்றம்

இதுகுறித்த செய்தி கடந்த 12-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக மின்வாரிய துறையினர் பெருமங்கலம் ஏரிக்கரையில் வயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை அகற்றி, அங்கு புதிதாக மின் கம்பம் அமைத்துள்ளனர்.இதை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கு விவசாயிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்