கமுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கமுதியில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
கமுதி
கமுதியில் எட்டுக்கண் பாலத்தில் இருந்து பஸ் நிலையம் மருது பாண்டியர் சிலை முத்துமாரியம்மன் கோவில் பாலச்சந்தை வரை ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கமுதி வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சக்திவேல், உதவி பொறியாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் முருகன், சாலை ஆய்வாளர் சூரியகாந்தி, கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் குருநாதன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார், பேரூராட்சி, வருவாய் துறை, மின்வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.