வேத நாராயண பெருமாள் கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள வேத நாராயண பெருமாள் கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-05-10 18:28 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேத நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வந்தனர். இந்தநிலையில் இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு செய்தது. இதையொட்டி கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் செயல் அலுவலர் சிலம்பரசன், வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினர் பெருமாள் கோவிலை சுற்றி ஆக்கிரமித்திருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றினர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்