வாணியம்பாடி அருகே 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வாணியம்பாடி அருகே 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

Update: 2023-05-02 17:48 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரங்களை வைத்து அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் புத்துக்கோவில் பகுதியில் சென்னை- பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலையிலும், பெங்களூரு-சென்னை செல்லும் சர்வீஸ் சாலையிலும் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றும் பணிகள் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது.

இதில் 15-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. அம்பலூர் போலீசார் பாதுகாப்புடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்