திருப்பத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

Update: 2023-09-27 18:49 GMT

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட டபேதார் முத்துசாமி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்று நகராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று அந்த தெரு முழுவதும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்