தச்சநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நெல்லை தச்சநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நெலலை தச்சநல்லூர் உலகம்மன் கோவில் தெருவில் நெடுஞ்சாலை துறை பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதையொட்டி 6 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் சேகர், நெல்லை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.