கால்வாய் சீரமைக்கும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
துத்திப்பட்டு ஊராட்சியில் கால்வாய் சீரமைக்கும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் சிங் தெரு உள்ளிட்ட தெருக்களில் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் சாலைகளில் தேங்கி வந்தது.
இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சிங் தெரு மற்றும் பேரணாம்பட்டு சாலையில் கால்வாய் மீது அமைக்கபட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதில் 7 வீடுகள் மற்றும் உணவகம் ஆகிய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த பணியை ஊராட்சி தலைவர் சுவிதா கணேஷ், துணைத்தலைவர் விஜய் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றியவுடன் கால்வாய் சீரமைத்து கழிவுநீர் வெளியேற்றும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.