பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2023-05-04 20:39 GMT

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்துக்குள் உள்ள கடைகளின் முன்பு கட்டியிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் யாரும் தாமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் நேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப்பட்டது

இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரணியல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், தனிப்பிரிவு ஏட்டு ஸ்டாலின் உள்ளிட்ட இரணியல் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் தலைமையிலான அதிவிரைவுப் படையினரும் பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

பேரூராட்சி செயலாளர் அம்புஜம் தலைமையில், இளநிலை பொறியாளர் லிங்கேஸ்வரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று காலை கடைகள் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார். சில பொருட்களை அகற்றி பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்