ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாளையங்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. மேலும் இந்த இடத்தில் இணைப்பு சாலை அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கடைகளில் முன்பகுதியில் அமைந்துள்ள கூரைகள், கட்டிட முகப்பு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.