போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2023-05-03 19:51 GMT


சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை நடத்திய 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 3 கடைக்காரர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி ஊழியர் முத்துராஜ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்