சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
சங்கராபுரம்,
சங்கராபுரம் பஸ் நிலையத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள், அங்கு பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.