கால்வாய் அடைப்புகள் அகற்றம்
கோத்தகிரியில் கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உத்தரவின்படி, கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலையில் சுகாதார பணிகள் நடைபெற்றது. குப்பைகள், செடிகள், சாலையோரம் வளர்ந்திருந்த புற்கள் அகற்றப்பட்டு, கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டன. மேலும் குளோரின் பவுடர் போடப்பட்டது. இதை தொடர்ந்து மழைநீர் தேங்காமல் இருக்க, சாலையோரங்களில் இருந்த டயர்கள், பயனற்ற தொட்டிகள் போன்றவை அகற்றப்பட்டு, அங்கு கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் ஈடுபட்டனர்.
இதேபோல் 21 வார்டுகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.