விக்கிரவாண்டியில் விளம்பர பதாகைகள் அகற்றம்பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

விக்கிரவாண்டியில் விளம்பர பதாகைகளை பேரூராட்சி நிர்வாகத்தினா் அகற்றினா்.

Update: 2023-02-13 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி கடைவீதி மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுவருகிறது.

அதன்படி, பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமையில் செயல் அலுவலர் அண்ணாதுரை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இப்பணிகள் நடந்து வருகிறது. இதில்பேரூராட்சி துணை தலைவர் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்