விளம்பர பதாகைகள் அகற்றம்
பேரளத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.
நன்னிலம்:
பேரளம் பேரூராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை பேரளம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதையடுத்து அனைத்து சாலைகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.