சாலையில் திரிந்த 18 கால்நடைகள் அகற்றம்

சாலையில் சுற்றி திரிந்த கால்நடைகள் பிடித்து அகற்றப்பட்டன.

Update: 2023-05-18 18:57 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவில் கால்நடைகள் முக்கிய சாலைகளில் திரிந்ததால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர் ஒருவர், மாடு திடீரென குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தாசில்தார் லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று இரவு சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் போது 11 பசுக்கள், 5 காளைகள், 2 கன்று குட்டிகள் என 18 கால்நடைகள் பிடிபட்டது. இதனை அதிகாரிகள் குழுவினர் நெல்லை மாவட்டம் ஊத்துமலையில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது போன்ற திடீர் ஆய்வு நடத்தி சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து அகற்றப்படும் என்று தாசில்தார் லோகநாதன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்