குன்னம் தாலுகா அலுவலகம் இடமாற்றம்
குன்னம் தாலுகா அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அலுவலகம் பெரம்பலூர் சாலையில் குன்னம் போலீஸ் நிலையம் அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் தாலுகா அலுவலக கட்டிடம் பழுதடைந்தது. பாதுகாப்பு காரணம் கருதி குன்னம்-அரியலூர் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் செயல்படும் என குன்னம் தாசில்தார் அனிதா தெரிவித்து உள்ளார். மேலும் சமூக நல பாதுகாப்பு தனி தாசில்தார் அலுவலகம் மட்டும் பெரம்பலூர் சாலையில் உள்ள பழைய தாசில்தார் அலுவலக வளாக கட்டிடத்தில் செயல்படும் எனவும் தெரிவித்தார்.