பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்

குறுவை அறுவடையின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-11-09 18:45 GMT

குறுவை அறுவடையின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கோபிகணேசன் மற்றும் விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நெற்பயிர்கள் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் விடுபட்டு போன கிராமங்கள் மற்றும் மிகவும் குறைவான அளவில் 10 சதவீதம் வரை இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்கள் ஆகியவற்றுக்கு தேசிய இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு ஆண்டில் குறுவை அறுவடையின் போது பெய்த மழையினால் நெற்பயிர்கள் முளைத்து அழுகி பாதிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது சங்கத்தின் செயலாளர் ராஜாராமன், இணை செயலாளர் ரமேஷ், கடக்கம் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்