எண்ணூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - தமிழக அரசு

2,301 குடும்பங்களுக்கு தலா ரூ. 12,500 நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-21 15:57 GMT

சென்னை,

எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 12,500 நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . வாழ்வாதாரம் பாதித்த 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ. 12,500 நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எண்ணெய் கசிவால் சேதமடைந்த 787 படகுகளுக்கு தலா ரூ. 10,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சிபிசிஎல் நிறுவனம் 7 கோடியே 53 லட்ச ரூபாயை பசுமை தீர்ப்பாயத்தில் செலுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் கசிவு விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்