மீனவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி

படகு மோதி இறந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-12-03 18:45 GMT

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் சிங்கித்துறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜெனஸ்டன் (வயது 23). இவர் சம்பவத்தன்று கடலில் மீன் பிடிக்கச் சென்றார். பின்னர் கரைக்கு திரும்பிய போது படகை கடலில் இருந்து கரையேற்றும் ேபாது படகு மோதி ஜெனஸ்டன் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து மீன் வளம் மீனவர் நலன் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஜெனஸ்டன் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவியாக வழங்கினார்.

அவருடன் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர அவை தலைவர் முஹம்மது மைதீன், துணை செயலாளர் கதிரவன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு, நகரசபை கவுன்சிலர்கள் தஸ்நேவிஸ் ராணி, அஜ்வாஜ், சிங்கித்துறை ஊர் கமிட்டி தலைவர் அன்றன் உள்பட பலர் சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்