தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி
மயிலம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மயிலம்,
மயிலம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சுகுணா என்பவருடைய கூரை வீடு எரிந்து சேதமானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மயிலம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வக்கீல் சேதுநாதன் மற்றும் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரிசி, மண்எண்ணெய், வேட்டி- சேலை, போர்வை, மண்எண்ணெய் அடுப்பு, பிளாஸ்டிக் குடம், பாய், தலையணை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நிவாரணமாக வழங்கி ஆறுதல் கூறினர். அப்போது மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயன், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கமலக்கண்ணன் மற்றும் கிளை கழக செயலாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.