6 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடும் பணி
அவலாஞ்சி அணையில் 6 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
ஊட்டி
அவலாஞ்சி அணையில் 6 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
டிரவுட் மீன் குஞ்சுகள்
நீலகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக 6 ஆயிரம் டிரவுட் மீன் குஞ்சுகளை பணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் ஆணைபடி 20 ஆயிரம் டிரவுட் மீன் முட்டைகளை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோகர்நாத் அரசு டிரவுட் மீன் பண்ணையில் இருந்து கொள்முதல் செய்து, அவலாஞ்சி அரசு டிரவுட் மீன் பண்ணையில் இருப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் 20 ஆயிரம் டிரவுட் மீன் முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையில் கடந்த மாதம் இருப்பு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. 50 நாட்களில் மூட்டைகளில் இருந்து மீன் குஞ்சுகள் வெளிவந்து உள்ளன.
முதற்கட்டமாக...
இந்த நிலையில் தற்போது 20 ஆயிரம் முட்டைகளில் இருந்து, 14 ஆயிரம் டிரவுட் மீன் குஞ்சுகள் பெறப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அவலாஞ்சி அணையில் 6 ஆயிரம் டிரவுட் மீன் குஞ்சுகளை விடும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 2-ம் கட்டமாக மீதமுள்ள டிரவுட் மீன்குஞ்சுகள் லக்கடி, மேல்பவானி, தேவர்பேட்டா மற்றும் எமரால்டு நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள நீரோடைகளில் விடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பவானிசாகர் மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் தில்லை ராஜன், ஊட்டி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.