கிணற்றில் பிணமாக கிடந்த பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில்

Update: 2023-04-03 17:43 GMT

கள்ளக்காதல்

திருப்பத்தூர் தாலுகா புதிய அத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (வயது 34) கட்டிட வேலை செய்து வந்தார். இவரது கணவர் சங்கர் (47). இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்துமதிக்கும், பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரகு (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பெங்களூருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 15, நாட்களுக்கு முன்பு ரகுவின் முதல் மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதல் மனைவியுடன் வாழ்வதாக ரகு சம்மதம் தெரிவித்ததன் பேரில் இந்துமதியை அவரது கணவருடன் சேர்ந்து வாழும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

உடலை வாங்க மறுப்பு

இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி இந்துமதி கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சென்று இந்துமதியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேத பரிசோதனை முடிந்ததும், உறவினர்களிடம் இந்துமதியின் உடலை ஒப்படைத்தனர்.

ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு காரணமாக இருந்த கள்ளக்காதலன் ரகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

அதைத்தொடர்ந்து உடலை வாங்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்