ரேக்ளா பந்தயத்தில் 262 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

தாராபுரத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் 262 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு தங்க காசு மற்றும் சுழல்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

Update: 2023-01-22 17:01 GMT

தாராபுரத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் 262 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு தங்க காசு மற்றும் சுழல்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

ரேக்ளா பந்தயம்

தாராபுரம் ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் இணைந்து நடத்திய 10-வது ஆண்டு ரேக்ளா பந்தயம் நல்லமை நகர் சுங்கத்தில் நேற்று காலையில் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. போட்டியில் 262 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது. நேர ஒதுக்கீடு அடிப்படையில் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பந்தயத்தில் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் அடிப்படையில் நடந்த இப்போட்டிகளில் கோவை, திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 262 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

200 மீட்டர் போட்டிகளை தாராபுரம் நல்லம்மை கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேணுகோபாலும், 300 மீட்டர் பந்தயங்களை நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்தும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

200,300 மீட்டர்

நேர அடிப்படையில் நடந்த இப்போட்டிகளில் 200 மீட்டர் பிரிவில் முதல் பரிசை சதீஷ்குமார் அங்கிதொழுவு, கர்ணன் கொண்டரசம்பாளையம் அணியினரும், 2-ம் பரிசைவிக்னேஷ் அப்பாதுரை புளியமரத்துப்பாளையம், விக்னேஷ் பாபு குருப்பநாயக்கன்பாளையம் ஆகியோர் பெற்றனர்.

யுவராஜ் தலைவர் ரெட்டியார்பாளையம் 3-ம் பரிசை வென்றனர்.

300 மீட்டர் பிரிவில் ரவிச்சந்திரன் காரத்தொழுவு, மதன் சுப்பிரமணியம் துலக்கனூர்அணியினர் முதல் பரிசையும், சதீஷ்குமார் முத்தூர் 2-ம் பரிசையும், சிவஞானம் அர்த்தனாரி பாளையம், சிவராஜ் செட்டிபாளையம் அணியினர் 3-ம் பரிசினையும் பெற்றனர்.

தங்க காசு பரிசு

போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு முதல் பரிசு 8 கிராம் தங்கக்காசு, 2-ம் பரிசாக 6 கிராம் தங்க காசு, 3-ம் பரிசாக 4 கிராம் தங்க காசு மற்றும் 4-ம் பரிசாக 2 கிராம் தங்க காசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

அப்போது தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில் குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, பா.ஜ.க. கொங்கு ரமேஷ், பொறுப்பாளர் பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தாராபுரம் போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்