கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் 6 மனுக்கள் நிராகரிப்பு

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Update: 2023-08-17 21:07 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மொத்தம் 57 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், தகுதியான 44 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்கள் மீது முறையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிற 23-ந் தேதிக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குனரக இணை இயக்குனர் கமலநாதன், மாவட்ட கருவூல அலுவலர் தியாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஜோஜோ ஆபிரகாம், சென்னை ஓய்வூதிய இயக்குனரக முதுநிலை கண்காணிப்பாளர் ரிச்சர்ட் பாட்ரிக் மற்றும் அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்