கடல் நீர் உட்புகுந்த வாய்க்கால் சீரமைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கடல்நீர் உட்புகுந்த வாய்க்காலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Update: 2022-11-02 18:45 GMT

திருக்கடையூர்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கடல்நீர் உட்புகுந்த வாய்க்காலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

கடல்நீர் உட்புகுந்தது

மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழைநீர் சின்னங்குடி சேவனாறு, அம்மன்ஆறு ஆகிய வாய்க்கால் வழியாக தான் வடிந்தாக வேண்டும். தற்போது வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் கடல் நீர் விளைநிலங்களில் உட்புகுந்து பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், இந்த வாய்க்கால்களில் அதிக அளவில் தண்ணீர் வரத்து இருந்து வருவதால் குமாரகுடி, சின்னமேடு, மருதம்பள்ளம், சங்கேந்தி, வடகட்டளை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் உள்ள 800 ஏக்கரில் நேரடி விதைப்பு சம்பா சாகுபடி செய்து வந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர்.

வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை

எனவே கடல் நீர் உட்புகாமல் தடுக்க தடுப்பணை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான செய்தி நேற்று 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது.இதன் எதிரொலியாக மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் விஜயபாஸ்கரன், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு காலமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன் ஆற்றில் கடல் நீர் உட்புகுந்த வாய்க்காலை ெபாக்லின் எந்திரம் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்