வட்டார விளையாட்டு போட்டியில் உடன்குடி பள்ளி மாணவர்கள் சாதனை

வட்டார விளையாட்டு போட்டியில் உடன்குடி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-09-16 18:45 GMT

உடன்குடி:

நாசரேத் வட்டார அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. இதில், இறகு, பூப்பந்தாட்ட போட்டியில் உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

இறகு பந்தாட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் பொன்முகுந்தன் முதலிடமும், இரட்டையர் பிரிவில் ராமலிங்கம், அதனாஷியஸ் ஜான்சன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். 17, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் பெனட், பிளஸ்சன், சங்கர் ஹரிகரன், மனோஜ்ராஜன் ஆகியோர் 2-வது இடமும், பூப்பந்தாட்டத்தில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் மாணவர்கள் முதலிடமும், 17, 19 வயதுக்கான பிரிவில் 2-வது இடமும் பெற்றனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் அருள்ராஜா, தலைமையாசிரியர் லிவிங்ஸ்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிக்குமார், ஐசக் கிருபாகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

----

Tags:    

மேலும் செய்திகள்