வட்டார அளவிலான கலைவிழா
வட்டார அளவிலான கலைவிழாவை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஜோலார்பேட்டை வட்டார அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். மேலும் இந்த போட்டியில் தோல் கருவி, தந்திக்கருவி, காற்றுக்கருவி, இசைச் சங்கமம், இசை -வாய்ப்பாட்டு ஆகியவை 6-ம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெற்றது. விளையாட்டு போட்டியை ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். மேலும் கலை துறையில் சிறந்து விளங்கிய பயிற்றுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் வரவேற்றார்.
போட்டியின் மேற்பார்வையாளர் தமிழரசி, ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், நகர மன்ற துணை தலைவர் இந்திரா பெரியார்தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.