ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்
உளுந்தூர்பேட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் சமூக வலைதளத்தில் ஆடியோ வைரல்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் முருகன். இவர் நேற்று மாலை திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) நடராஜனை போனில் தொடர்பு கொண்டு ஊராட்சி செயலாளருக்கு சம்பளம் போடுவது குறித்து பேசினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சிக்கு சென்ற நடராஜன் அரசு பிரதிநிதிகளை ஏளனமாக பேசியதோடு, ஊராட்சி மன்ற தலைவரையும் ஆபாசமாக பேசி, சஸ்பென்டு செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு போனை துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த உரையாடல் குறித்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.